சினிமா

கமல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஷிவானி நாராயணன்…

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவரும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர் நடிகையுமான ஷிவானி நாராயணன் கடந்த ஜூலை மாதம் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் எதற்கு ஷிவானி எந்தவித பதிலையும் கூறவில்லை.

தற்போது அதற்கான காரணம் வெளியே தெரியவந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத்பாசில் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version