டிவி

ஷிவானி என்ன சொன்னா? ஓகே ஆகிடுச்சா? நல்லா இறுக்கு? பாலாஜியை கலாய்க்கும் சம்யுக்தா – சுரேஷ்!

Published

on

பாலாஜி – அர்ச்சனா சண்டை முடிவுக்கு வந்துவிட்டது போல. இன்றைய இரண்டாவது ப்ரோமோ சுவாரஸ்யங்களை இங்கு பார்ப்போம்.

ரொம்ப எமோஷ்னலா முடிந்துவிட்டது அந்த மேட்டர் என்று ஷிவானியிடம் பகிர்ந்துகொள்கிறார் பாலாஜி. அதை கேட்ட ஷிவானி அழுந்தீங்க போல என்று கேட்கிறார். அதற்கு பாலாஜி, அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது என்கிறார்.

இது எல்லாம் நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது என்கிறார் ஷிவானி. அதற்குப் பாலா, நம்மை அப்படியே செட் பண்ணிட்டாக. நம்ம திமிராகப் பேசுவதால், எல்லாமே திமிராகத் தான் பேசுவான் என்பது போல செட் செய்கிறார்கள்.

பாலாஜிக்கு அறுதல் கூறும் ஷிவானி, நீங்கள் நேர்மையான நபர், அதை எப்படி சொல்கிறீர்கள் அணுகுமுறை வேறு விதமாக உள்ளது. ஆனால் அது உங்கள் ஸ்டைல் என்று அழகாக பாலாஜியைப் பார்த்துச் சிரிக்கிறார்.

அடுத்த காட்சியில், சம்யுக்தா மொட்டையாக பாலாஜியை பார்த்து ஷிவானி என்ன சொனால், ஓகே ஆகிடுச்சா என்று மொட்டையாக கேட்கிறார்.

ஷாக் ஆன பாலாஜி அதில் இரட்டை அர்த்தம் உள்ளது போல, எதை சொன்னாலும் தெளிவாகச் சொல்லுங்கள் என்று சம்யுதாவிடம் கேட்க, பக்கத்தில் படுத்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி நல்லா இறுக்கு என்று நக்கலடிக்க, சிரிப்புடன் முடிவடைந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோ.

இதை பார்க்கும் போது நேற்று நடைபெற்ற சண்டை முடிந்து, அதற்கு ஆறுதல் ஷிவானி கூற அடுத்தகட்டத்திற்குச் செல்கிறது பிக்பாஸ் சீசன் 4.

author avatar
seithichurul

Trending

Exit mobile version