டிவி

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஷிவானியின் ரொமான்ஸ் ஹீரோ.. பாலாஜி நிலை என்ன ஆகும்?

Published

on

பகல் நிலவு சீரியலில் ஷிவானியின் ஜோடியாக நடித்தவர் அசீம். இவர்கள் இருவரும் சீரியலில் நடித்திதற்காக சிறந்த ஜோடி என்று விருதும் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக நடனமாடியுள்ளனர். பகல் நிலவு சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் இவர்கள் ஜோடியாக நடத்தினர்.

ஷிவானி, அசீம் இருவரும் காதலிக்கின்றனர் என்று செய்திகள் பரவின. இதை அடுத்து அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளார். அவருக்கு இரண்டு குழைந்தாள் உள்ளன என்று எல்லாம் கூட செய்திகள் வந்தன.

இப்படி செய்திகள் வந்தபடி இருக்க, கடைக்குட்டி சீரியலில் இருந்து ஷிவானி வெளியேறினார். அதன் பிறகு விஜய் டிவியில் பெரிதாக இடம்பெறாமல் இருந்து வந்தார் ஷிவானி.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஷிவானி போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். அங்கு பலாஜிக்கும் ஷிவானிக்கும் காதல் ஏற்படுவது போல எல்லாம் ப்ரோமோக்களில் காண்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஷிவானியின் சீரியல் ரொமான்ஸ் ஹீரோ அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியான பிறகு அசீம் உள்ளே செல்வார். அதன்பின் அசீம் – ஷிவானி – பாலா இடையில் பிரச்சனைகள் வராமல் இருந்தால் சரி.

seithichurul

Trending

Exit mobile version