சினிமா செய்திகள்

வடிவேலு ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி: வைரல் வீடியோ!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி நாராயணன், வடிவேலு ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். இவர் பாலாஜி உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் அதனால் அவருடைய தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது ஷிவானியை கண்டபடி திட்டினார் என்பதும் தெரிந்ததே.

இருப்பினும் அவர் பாலாஜியுடன் கடைசிவரை நெருக்கமாக இருந்தார் என்பதால் தனித்தன்மையை இழந்து கடைசியில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் சரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவது ஷிவானியின் வழக்கமாக இருந்தது.

அந்த வகையில் தற்போது அவர் ’வாடி பொட்ட புள்ள வெளியே’ என்ற வடிவேலுவின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். கண்ணாடி முன்பு அவர் ஆடிய இந்த குத்தாட்டத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ள ஷிவானி நாராயணனின் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருசிலர் எத்தனையோ பாடல்கள் இருக்க, வடிவேலு பாடலுக்குத்தான் குத்தாட்டம் ஆட வேண்டுமா என்ற கமெண்ட்ஸ்களையும் செய்யும் பதிவு செய்து வருகின்றனர்

 

Trending

Exit mobile version