டிவி

செம ‘அப்செட்’ ஆக இருக்கும் பிக்பாஸ் ஷிவானி- இதுதான் கரெக்ட் என்கின்றனர் ரசிகர்கள்..!

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்களாக ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் இதர ஹவுஸ்மேட்ஸ்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோழி- நரி லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மிகவும் சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாடு குறைந்த போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் ஓய்வு அறைக்கு அனுப்பப்பட்டனர்.

’நாமினேஷன் பண்ணுவதெல்லாம் சரி ஆனால் என் மீது குற்றங்களை சுமத்தாதீர்கள்’ என ஷிவானி மற்ற போட்டியாளர்களிடம் கடிந்துகொண்டார். ஷிவானி அப்செட் ஆனபோதும் நெட்டிசன்கள் ‘இந்த வாரம்தான் சரியான ஆட்களை ஓய்வறைக்கு அனுப்பியுள்ளீர்கள்’ என கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version