சினிமா செய்திகள்

இரண்டு வருடங்களுக்கு முன் போட்டியாளர், இப்போது ஆங்கர்: ஷிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடுவது மட்டுமின்றி மாபாக மற்றும் பிரியங்கா செய்யும் காமெடியும் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் தனியார் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் வாரம் முதல் வேறு தொகுப்பாளினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ஷிவாங்கி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஷிவாங்கி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கு முன் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவாங்கி தற்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முன்னேறி உள்ளார் என்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version