சினிமா செய்திகள்

தாகமாக இருந்தால் விஷத்தை குடிப்பீர்களா? ஷிவாங்கியின் விரக்தி பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

தாகமாக இருந்தால் விஷத்தை குடிப்பீர்களா? என ஷிவாங்கி விரக்தியாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக ஷிவாங்கி என்றாலே பாசிட்டிவ் எண்ணம் என்றும் ஷிவாங்கி இருக்குமிடம் பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும் என்றும் அனைவரும் அறிந்ததே. இதனை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் திடீரென தனது சமூக வலைத்தளத்தில் ஷிவாங்கி விரக்தியுடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் நீங்கள் தனிமையில் இருக்கும்போது ஆபத்தான மற்றும் விஷத்தன்மையுள்ள ஒரு நபருடன் பழகும் நிலை ஏற்படும். நீங்கள் தாகமாக இருந்தால் விஷத்தை எடுத்து குடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அவருடைய இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் ஷிவாங்கிக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு விரக்தியாக பதிவு செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஷிவாங்கிக்கு ஏதேனும் மன சங்கடம் இருந்தால் அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் எப்பொழுதும் போல் ஜாலியாக இருங்கள், உங்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம்’ என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவு செய்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version