தமிழ்நாடு

பாஜகவில் சிவாஜியின் மகன்: நாளை இணையவிருப்பதாக தகவல்!

Published

on

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பாஜகவில் அதிக அளவிலான நடிகர் நடிகைகள் இணைந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் சேரப்போவதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவர் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வந்தவர். இந்த நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பிப்ரவரி 11ஆம் தேதி அதாவது நாளை பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழகத்திற்கான பொறுப்பாளருமான சிடி ரவி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் நாளை இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவாஜிகணேசன் ஒரு பழுத்த காங்கிரஸ்காரர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி அவர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியையும் நடத்தி வந்தார்., இந்த நிலையில் சிவாஜியின் மகன் ராம்குமார் காங்கிரசுக்கு எதிராக இருக்கும் பாஜக கட்சியில் இணையவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Trending

Exit mobile version