வேலைவாய்ப்பு

கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் வேலை!

Published

on

கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 366. இதில் ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 366

வேலை: ரிகர் – 217

வேலை: எலக்ட்ரீசியன் – 149

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிகர் என்ஏசி பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் ரிகர் வேலைக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எலக்ட்ரீசியன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 01.07.2019 ஆம் தேதி அடிப்படையில் 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2019 (உத்தேசித்தானது)

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள mazagondock.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.07.2019

Trending

Exit mobile version