கிரிக்கெட்
உலகக் கோப்பை 2019-ல் இருந்து ஷிகர் தவான் நீக்கம்! மாற்று வீரர் யார்?
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019-ல் இந்திய அணிக்கு முக்கிய ஓப்பனிங் பேட்ஸ் மேனாக இருந்து வந்த ஷிகர் தவான், காயம் காரணமாக முழு தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்விலிருந்து வருகிறார் தவான். இதனாலேயே கடந்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
தற்போது கட்டை விரலில் ஷிகர் தவானுக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் உலகக் கோப்பை தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தவான் வெளியேற்றப்பட்டுள்ளதால் இவரது காலியிடத்தை ரிஷப் பந்த் நிரப்ப உள்ளார்.