கிரிக்கெட்

INDvENG- 2 ரன்னில் சதத்தை மிஸ் செய்த ஷிகர் தவானின் ‘கெத்து’ பேச்சு!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 98 ரன்கள் விளாசிய தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவுடன் நடந்த டி20 போட்டயில் தோல்வியடைந்த நிலையில், தற்போது முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவான், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் சதத்தை மிஸ் செய்தது இந்திய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இது குறித்து தவான், ‘மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியது நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அதிகமாக பயிற்சி எடுத்து உள்ளேன். மேலும் எனக்கும் ரோஹித்துக்கும் கொஞ்ச நேரம் பொறுத்தால் அதிகமான ரன்களை அடிக்க முடியும் என்று தெரியும். நான் 98 ரன்களில் அவுட்டானதை நினைத்து வருத்தப் படவில்லை. எனது சிந்தனையெல்லாம் அணிக்கு எவ்வாறு ரன்களை சேர்ப்பது என்பதில் மட்டும்தான் இருந்தது. இந்தப் போட்டி இல்லை என்றால் அடுத்த போட்டியில் அடித்துக் கொள்ளலாம். அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒருநாள் தொடரையும்  கைப்பற்றுவோம்’ என நம்பிக்கை மிளிர தெரிவித்துள்ளார். 

Trending

Exit mobile version