சினிமா செய்திகள்

’சீயான் 60’ படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர் அறிவிப்பு

Published

on

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சீயான் 60’ திரைப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்ரன் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் நடன இயக்குனராக ஷெரீப் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக தினேஷ் சுப்பிரமணியன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version