சினிமா

டெங்குவுக்கு டாட்டா காட்டிய ஷ்ரத்தா கபூர்!

Published

on

டெங்கு காய்ச்சலால் கடந்த ஒருமாதமாக அவதி பட்டு வந்த நடிகை ஷ்ரத்தா கபூர், டெங்குவின் கோரப்பிடியில் இருந்து மீண்டுள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாய்னா நேவாலாக ஷ்ரத்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரத்தாவிற்கு, டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார் ஷ்ரத்தா. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version