சினிமா செய்திகள்
தளபதி 63ல் இணையும் ஷாரூக் கான்?
நடிகர் விஜய்யின் தளபதி 63 படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லி இயக்கத்தில், மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஷாரூக் கானை படக்குழு நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி மற்றும் படக்குழுவினர், ஒரே நேரத்தில் ட்விட்டரில் ஷாரூக்கானை பின் தொடர்ந்ததால், இந்த சந்தேகம் மேலும், உறுதியாகியுள்ளது.
மேலும், ராயப்பேட்டையில், குருகிராம் போலீஸ் ஸ்டேஷன் செட்டை படக்குழு போட்டுள்ளனர். இந்த செட்டில், போலீஸ் அதிகாரியாக ஷாரூக்கான் நடிக்கப் போவதாகவும், சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாலிவுட் பாட்ஷா மற்றும் கோலிவுட் கிங் விஜய் இணைந்து நடித்தால், அந்த படத்தின் புரொமோஷன் மற்றும் வெற்றி எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.