சினிமா செய்திகள்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான்- நயன்தாரா: சுதந்திர தினத்தில் வெளியாகும் டீசர்!

Published

on

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்து வரும் பாலிவுட் படத்தின் டீசர் வருகிற சுதந்திர தினம் அன்று வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் அட்லியின் முதல் படமான ராஜா ராணி மூலமாகத் தான் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தனது இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கினார். ராஜா ராணி படத்துக்குப் பின்னர் தளபதி விஜயை வைத்து தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களைக் கொடுத்த அட்லியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்காந் தன்னுடன் பணியாற்ற அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தகவல்கள் அனைத்தும் மெதுவாகக் கசிந்து வந்தாலும் தற்போது ஷாருக்கான் – நயன்தாரா படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. முதன்முறையாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு ‘சங்கி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பையில் ஷாருக்கான் – நயன்தாரா பங்குபெற ஒரு சின்ன ஷூட்டிங் நடைபெற்று உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சங்கி படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்காகவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் நடந்துள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்காந் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். அட்லியின் இந்தப் படம் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் கதையில் இருந்து கிடைத்த உத்வேகத்தின் மூலம் எடுத்துள்ளார் என்ற செய்தியும் வைரல் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version