சினிமா செய்திகள்

கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் திடீரென கழன்ற நடிகையின் ஆடை: பெரும் பரபரப்பு

Published

on

கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பின் போது பிரபல நடிகையின் ஆடை திடீரென கழன்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் தற்போது திரைப்பட விழா நடைபெற்று வருகிறது என்பதும் இந்த விழாவில் இந்திய நட்சத்திரங்கள் உள்பட பல சர்வதேச திரைப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஷாரன் ஸ்டோன் வித்தியாசமான உடையில் வந்திருந்தார்.

அவரது உடையை பார்த்த பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுக்க போட்டி போட்டனர். இந்த நிலையில் திடீரென அவரது ஆடை கழன்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவருடைய உதவியாளர்கள் விரைந்து வந்து அவரது ஆடையை சரிசெய்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version