உலகம்

நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் சிறைத்தண்டனை? அதிர்ச்சி தகவல்

Published

on

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தால் சிறை தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பாஸ்வேர்டை பகிர்வதால் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு 222 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் 100 மில்லியன் நபர்கள் அதிகமாக நெட்பிளிக்ஸ் ஓடிடியை பார்ப்பதாகவும் எனவே பாஸ்வேர்டை பகிர்வதை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் யுனைடெட் கிங்டம் நாட்டில் இது குறித்த விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அது குற்றம் என்றும் இதனை எதிர்த்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.

நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தால் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தவர் மட்டும் பகிரப்பட்டவர்களுக்கு சிறை தண்டனை அளிக்க கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனுமதியின்றி சமூக ஊடகங்களில் திரைப்படங்களை பகிர்வது, சந்தா செலுத்தாமல் ஹேக் செய்து ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பது ஆகியவையும் பதிப்புரிமை மீறல் குற்றத்தில் வரும் என்றும் அந்த குற்றத்தை செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் யுனைடெட் கிங்டம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் தற்போது இந்த புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version