இந்தியா

டாடா, அதானி பங்குகள் பெரும் சரிவு.. பங்குச்சந்தையின் தொடர் சரிவு ஏன்?

Published

on

பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதுமே பங்கு சந்தை இறக்கத்தில் உள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக டாட்டா குழுமம் மற்றும் அதானி குழுமங்களின் பங்குகள் சரிவை கண்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

கடந்த சில வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பங்குச் சந்தையும் அதற்கேற்றவாறு ஏற்றம் கண்டன என்பதும் சமீபத்தில் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, ரஷ்யா – உக்ரைன் போர் 10 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருவது, பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தம் காரணமாக பங்குச்சந்தை மீண்டும் சரிய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சீனா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று செய்தி காரணமாகவும் பங்குச்சந்தை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்து 60180 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை சுமார் 200 புள்ளிகள் குறைந்து 17923 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.79 ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கமாடிட்டி சந்தையில் தங்கம் குறைந்துள்ளதாகவும் வெள்ளி ஓரளவு உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்குச்சந்தையில் அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதாணி என்டர்பிரிஸ், ஹிண்டல்கோ, எஸ்பிஐ, மாருதி சுசிகி, யுபிஎல், லார்சன், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிரோ மோட்டாகோர்ப், விப்ரோ, கோல் இந்தியா, இன்போசிஸ், எம்எம், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், பவர் கிரட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா, டெட்டன் கம்பெணி, பாரதி ஏர்டெல், கிராசிம் ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் சிப்ளா, சன்பார்மா, எச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் ஓரளவு ஏற்றம் கண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version