இந்தியா

இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு: ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்

Published

on

இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பதும் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 2000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கொரோனா வைரஸ் பரவல்அதிகரித்து வருவதால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவு விற்பனை செய்து வருகின்றனர் என்றும் இதனால் தொடக்கம் முதலே இன்றைய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 492 ஆக இருந்தது என்பதும் அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 468 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 149 என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 62 ஆயிரமாக இருந்த சென்சாக்ஸ் தற்போது கிட்டத்தட்ட 5000 புள்ளிகள் குறைந்து 57 ஆயிரமாக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version