இந்தியா

1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ்: அமெரிக்கா காரணமா?

Published

on

கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களில் மும்பை பங்கு சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்

ஜனவரி 17-ஆம் தேதி சரியத் தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 5000 புள்ளிகளுக்கு மேல் இது வரை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இதன் காரணமாக பொதுச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முடிவு இன்று வெளியானதை அடுத்து மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த சரிவு தற்காலிகமானது என்று என்றும் விரைவில் பங்குச்சந்தை மீண்டும் வரும் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 1183.64 புள்ளிகள் வரையில் சரிந்தது. சற்றுமுன் சென்செக்ஸ் 1136.13 புள்ளிகள் குறைந்து 56725.96 என வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 327.25 புள்ளிகள் குறைந்து 16949.25 என வர்த்தகமாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version