இந்தியா

வர்த்தம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் 1300 புள்ளிகள் சரிவு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Published

on

வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 300 புள்ளிகள் சரிந்ததால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து மீண்டும் பங்குச் சந்தை சரிந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த வாரம் முதல் நாளே 1300 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஆயிரத்து 300 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 700 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி சுமார் 400 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 600 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில வாரங்களில் சென்செக்ஸ் சுமார் 7000 புள்ளிகள் சரிந்துள்ளதால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version