இந்தியா

டெல்லி ஜே.என்.யூ பல்கலையின் துணைவேந்தராக தமிழ்ப்பெண் நியமனம்!

Published

on

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு தமிழ் பெண் ஒருவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியர் சாந்தினிஸ்ரீ பண்டிட் என்பவர் துணைவேந்தராக சற்றுமுன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாந்தினிஸ்ரீ பண்டிட் அவர்ல்: புனேவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் என்பதும் தற்போது பதவி உயர்வு பெற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக பேராசிரியராக இருந்த நிலையில் தற்போது அவருக்கு துணைவேந்தர் பதவி கிடைத்துள்ளது தமிழ் பெண்கள் அனைவருக்கும் பெருமைக்குரியதாக கருதப்படுகிறது/ இதனை அடுத்து தமிழக பெண்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய கல்வி அமைச்சருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் தமிழ் பெண்கள் பல முக்கிய பதவிகளை பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் உலகப் புகழ்பெற்ற ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பெண் ஒருவர் பல துணைவேந்தராக நியமிக்கப்பட்டது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version