சினிமா செய்திகள்

பாவக்கதைகள் ரிவ்யூ கொடுத்த தளபதி… உற்சாகத்தில் சாந்தனு..!- வைரல் வீடியோ

Published

on

பாவக்கதைகள் ஆந்தாலஜியில் தங்கம் என்னும் திரைக்கதையில் நடிகர்கள் சாந்தனு மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்ததற்கு சினிமா துறையின் பல முன்னணி பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் நடிகர் சாந்தனு தங்கம் ஆக மிகவும் அருமையாக நடித்துள்ளதாக நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கும் வீடியோ ஒன்றை இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் காளிதாஸ் ஜெயராம் உடன் இணைந்து ஒரு வீடியோவாக சாந்தனு வெளியிட்டார். இந்த வீடியோவில் காளிதாஸ் நடிகர் விஜய் போலவே மிமிக்ரி செய்ய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சாந்தனு தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version