சினிமா செய்திகள்

’இந்தியன் 2’ திரைப்படம்: விவேக் கேரக்டருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் ஷங்கர்!

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. இந்த படத்தை தான் விரைவில் முடித்துக் கொடுப்பதாக நீதிமன்றத்தில் ஷங்கர் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் விவேக் நடித்து வந்த நிலையில் அவரது கேரக்டர் குறித்த படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென காலமாகிவிட்டார். இந்தநிலையில் விவேக் நடித்த கேரக்டரில் தற்போது வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

விவேக் கேரக்டரில் நடிக்க ஷங்கர் இரண்டு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஷங்கர் தற்போது ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருந்தாலும் இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ’இந்தியன் 2’படத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version