சினிமா செய்திகள்

த்ரிஷாவை ரிஜக்ட் செய்த ஷங்கர்: எந்த படத்தில் தெரியுமா?

Published

on

இயக்குனர் ஷங்கர் தனது ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க இருந்த நிலையில் அவரை ரிஜெக்ட் செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பாய்ஸ் என்ற திரைப்படத்தை ஷங்கர் இயக்கிய போது ஹீரோயின் கேரக்டருக்கு நாயகி தேடும் படலம் நடந்தது. அப்போது மிஸ் மெட்ராஸ் என்ற பட்டம் வென்ற த்ரிஷாவை அவரது உதவியாளர்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து அவரிடம் காண்பித்தனர்.

கண்டிப்பாக த்ரிஷாவை அவர் ஓகே செய்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் த்ரிஷாவிடம் ஏதோ மிஸ் ஆகிறது என்றும், எனவே அவர் இந்த படத்திற்கு சரியாக வரமாட்டார் என்றும் ஷங்கர் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தான் ஜெனிலியா இந்த படத்தில் கமிட்டானார். பாய்ஸ் படத்திற்கு பின்னர் த்ரிஷா பல வெற்றி படங்களில் நடித்த இருந்த நிலையில் பாய்ஸ் படத்தில் த்ரிஷா பொருந்த மாட்டார் என ஷங்கர் கணித்தது சரியா என்பதை ரசிகர்கள் தங்கள் எண்ணத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version