சினிமா செய்திகள்

மாஸ் நடிகருடன் இணைகிறார் ஷங்கர்: ‘இந்தியன் 2’ அவ்வளவு தானா?

Published

on

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தை முடிக்கும் முன்னரே அடுத்த படத்தை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வந்த திரைப்படம்’இந்தியன் 2’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

7) ராம்சரண்

ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக தெலுங்கு மாஸ் நடிகர் ஒருவருடன் ஷங்கர் இணைந்துள்ளதால் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் தனது அடுத்த படத்தின் பணிக்கு செல்வதால் ’இந்தியன் 2 ’படப்பிடிப்பு என்ன ஆனது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version