சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜின் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஷங்கர், மணிரத்னம் பங்கேற்பு!

Published

on

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன்பின் இயக்கிய ’கைதி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதனை அடுத்து அவர் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்க ஒப்பந்தமானார் என்பதும் அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது 35 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அடுத்து பிரபல இயக்குனர்கள் பலர் வருகை தந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், மணிரத்னம், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி உள்ளிட்ட இயக்குனர்கள் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து இதுகுறித்த புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

’மாஸ்டர்’ படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version