கிரிக்கெட்

ஷேர்ன் வார்னே மாரடைப்புக்கு இதுதான் காரணமாக இருக்கலாம்: மேனேஜர் தகவல்

Published

on

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவரது மாரடைப்புக்கு காரணம் என்னவாக இருக்கலாம் என அவரது மேனேஜர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனை அடுத்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அங்கு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷேர்ன் வார்னேவுக்கு நீண்டகால மேனேஜராக இருந்த ஜேம்ஸ் என்பவர் அவரது மரணம் குறித்து கூறிய போது ஷேர்ன் வார்னேவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது என்றும் அவர் அதிகம் புகை பிடித்ததால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறினார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும் அதன் பின் சிகிச்சைக்கு பின் குணமானார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version