இந்தியா

கொரோனாவை விரட்டும் ‘எறும்பு சட்னி’? பொதுமக்கள் சாப்பிடலாமா??

Published

on

‘சிவப்பு எறும்பு சட்னி’ சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்று தொடரப்பட்ட வழக்கில், அதனை ஆய்வு செய்யுமாறு ஆயுஷ் நிறுவனத்துக்கு ஓடிஷா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சிவப்பு எறும்புகள், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து அரைத்து, தேங்காய் சட்னி போல் சிவப்பு எறும்பு சட்னி பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் ஒடிஷாவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சிவப்பு எறும்பு சட்னியில் கால்சியம், துத்தநாகம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், எனவே, கொரோனாவுக்கு எதிராக இதனைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்பு, கொரோனவுக்கு எதிராக சிவப்பு எறும்பு சட்னியை பொதுமக்கள் பயன்படுத்தலாமா என்பது குறித்து  ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version