சினிமா

ஷாலினி அஜித்துக்கு இன்று பிறந்தநாள்!

Published

on

தல அஜித்தின் மனைவியும் முன்னாள் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியுமான ஷாலினியின் 39வது பிறந்த நாள் இன்று.

கேரளாவில் உள்ள திருவல்லாவில் 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். தனது 3 வயதில் ஓசை எனும் தமிழ் படத்தில் பேபி ஷாலினியாக அறிமுகமானார். அதன் பின்னர், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின்னர் அணியாதி பிறவு எனும் மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்யுடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. 1999ஆம் ஆண்டு அஜித்துடன் அமர்களம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டில் அஜித் – ஷாலினி திருமணம் நடைபெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படம் 2000ல் வெளியானது. பிரஷாந்துடன் இவர் நடித்த பிரியாத வரம் வேண்டும் படம் 2001ல் ரிலீசானது. திருமணத்திற்கு பிறகு இந்த இரு படங்கள் வெளியான நிலையில், அதற்கு அடுத்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார் ஷாலினி.

இன்றளவும் அஜித்தின் ஆடை வடிவமைப்பாளராக இருப்பது ஷாலினி தான்.

தல ரசிகர்கள் அனைவரும் ஆண்டு தோறும் ஷாலினியின் பிறந்த நாளை தல பிறந்தநாளாகவே கருதி கொண்டாடி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version