சினிமா செய்திகள்

’ருத்ர தாண்டவம்’ படம் பார்த்த ஷாலினி அஜித்: இயக்குனருடன் செல்பி!

Published

on

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட்ஸ் மற்றும் தர்ஷா குப்தா நடித்த ’ருத்ரதாண்டவம்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் அஜீத்தின் மனைவி ஷாலினி அஜீத் இந்த படத்தை பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ர தாண்டவம் படத்தின் ஹீரோ ரிச்சர்ட்ஸ், ஷாலினி அஜீத்தின் சகோதரர் என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே ரிச்சர்ட்ஸ் நடித்த ’திரெளபதி படத்தை திரையரங்கில் பார்த்து பாராட்டிய ஷாலினி அஜீத் தற்போது ருத்ரதாண்டவம் படத்தையும் பார்த்து உள்ளார்.

சென்னையில் உள்ள திரையரங்கில் நேற்று ஷாலினி அஜித், ருத்ர தாண்டவம் படம் பார்க்க வந்தபோது இயக்குனர் மோகன் ஜி உள்பட படக்குழுவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் படக்குழுவினருடன் ஷாலினி அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதும் இயக்குனருடன் செல்பி எடுத்துக் கொண்டார் என்றும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி அஜித் தனது சகோதரரின் படத்தை புரமோஷன் செய்யவே திரையரங்குகளில் வந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த ஷாலினிஅஜித் பட குழுவினரையும் குறிப்பாக சகோதரர் மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர்க்ளை பாராட்டிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ருத்ரதாண்டவம் திரைப்படம் இன்றைய சமூக சூழலுக்கு தேவையான திரைப்படம் என்றும் போதை மருந்து கடத்தல் மற்றும் மதமாற்ற கும்பலுக்கு சரியான சவுக்கடி ஆக இந்த படம் இருக்கிறது என்றும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version