சினிமா செய்திகள்

’சக்திமான்’ தொடரை திரைப்படமாக தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

Published

on

பழம்பெரும் பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா சூப்பர்ஹீரோ கேரக்டரில் நடித்த சக்திமான் தொலைக்காட்சி தொடர் கடந்த 90களில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் ஹிட்டானது.

இந்த சக்திமான் தொடரை பார்த்து பல குழந்தைகள் தங்களை சக்திமான் ஆகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தார்கள் என்பதும் தற்போதைய 90s கிட்ஸ்களுக்கு இந்த தொடர் இன்னும் விருப்பத்துக்குரிய தொடராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 90 களில் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சக்திமான் தொடரை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக சக்திமான் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version