சினிமா செய்திகள்

அமீர்கானுக்குப் பின் ஷாகித்கபூர்- பாலிவுட்டில் கலக்கும் விஜய் சேதுபதி

Published

on

பாலிவுட்டின் ஷாகித் கபூர் இணைந்து புது வெப் சீரிஸ் ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அவ்வப்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகிறார். முதலில் நடிகர் அமீர் காந் கரீனா கபூர் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படம் கொரோனா ஊரடங்கால் வெளியாகமலே உள்ளது. விரைவில் திரையரங்கங்களில் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் உடன் இணைந்து ஒரு ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் சேதுபதி உடன் இணைந்து நடித்த மாளவிகா மோகனனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version