சினிமா செய்திகள்

ஷிவாங்கி ஒரு தெய்வக்குழந்தை: ஷகிலாவின் வைரல் வீடியோ!

Published

on

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷகிலா என்பதும், அவருடைய இமேஜ் இந்த நிகழ்ச்சியின் மூலம் முழுவதுமாக மாறி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு முன்வரை கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்றிருந்த ஷகிலா இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஷகிலா அம்மா என்று அனைவரும் வாய் நிறைய அழைத்தது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இமேஜ் ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் மாறியது பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை ஷகிலா வெளியிட்டு இருந்த நிலையில் அந்த வீடியோவில் ஷிவாங்கி ஒரு தெய்வீகக் குழந்தை என்று கூறியுள்ளார். ஷிவாங்கியின் குரலும் அவருடைய பாடலும் அவருடைய டான்ஸும் மிகவும் அழகாக இருக்கும் என்றும் எல்லா திறமைகளையும் கடவுள் ஒரே ஒருவரிடம் வைத்திருக்கிறார் என்றால் அது நம்ம காலத்தில் ஷிவாங்கி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் பானுமதி அம்மா அவர்கள் பாட்டுப் பாடுவார்கள், டான்ஸ் ஆடுவார்கள், திரைக்கதை எழுதுவார்கள், எடிட்டிங் செய்வார்கள், இயக்கமும் செய்வார்கள். அதேபோல நம்முடைய காலத்தில் ஒரே ஒருவருக்கு அனைத்து திறமைகளும் இருக்கிறது என்றால் அது ஷிவாங்கி தான் என்று ஷகிலா தெரிவித்துள்ளார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/TheSnowflake18/status/1411377822271111170

Trending

Exit mobile version