சினிமா செய்திகள்
ஷகிலா மகளுடன் குக் வித் கோமாளி அஸ்வின்: வைரல் புகைப்படம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷகிலா என்றாலே ரசிகர்களுக்கு அவர் நடித்த ஆபாச திரைப்படங்கள் தான் ஞாபகம் வரும். ஆனால் தற்போது ஷகிலா என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் அவரை போட்டியாளர்களும் சரி கோமாளிகளும் சரி ’அம்மா’ என்றுதான் அழைத்து வருகிறார்கள் என்பதும் சமூக வலைதளங்களிலும் தற்போது ஷகிலா அம்மா என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு ஷகிலாவின் இமேஜ் ஒரே ஒரு நிகழ்ச்சியால் டோட்டலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு ஷகிலா தனது மகள் மில்லா என்பவரை அழைத்து சென்று இருந்த நிலையில் அதே நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் மில்லா செல்பி எடுத்துக்கொண்டார்.
ஷகிலா மகள் மில்லா, அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அஸ்வின் எனது சகோதரர் போல என்று ஷகிலாவின் மகள் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.