கிரிக்கெட்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஷாகிப் அல் ஹசன் ஓய்வு அறிவிப்பு!

Published

on

பங்களாதேஷ் அணியின் பிரபல ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007ல் இந்திய அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷாகிப், இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் 4,454 ரன்கள் மற்றும் 233 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக விளையாடியுள்ளார்.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வலுவாக இருந்தாலும், தற்போதைய அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து, இந்த செய்தி கிரிக்கெட் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

Poovizhi

Trending

Exit mobile version