சினிமா

ஷகிலா பயோபிக்கில் ஷகிலாவே நடிக்கிறாரா?

Published

on

80 மற்றும் 90களில் ஆபாச படம் என்றாலே அது ஷகிலா தான் என சொல்லும் அளவுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களை கட்டி இழுத்தவர். சன்னிலியோன், மியா கலிபா எல்லாம் இப்போது தான் இளைஞர்களை ஈர்த்தவர்கள். ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஷகிலா தான்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் சினிமா துறைக்கு வந்த ஷகிலா, கவுண்டமணியுடன் நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன காமெடியில் நடித்தவர்.

தவறான ஆட்கள் மற்றும் ஏழ்மையின் காரணமாக ஆபாச பட உலகில் நடிகையாக மாறவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். அங்கு தனது கொடியை நன்றாகவே பறக்க விட்டவர் ஷகிலா.

அவருடைய பயோபிக்கை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷகிலாவாக ரிச்சா நடித்துள்ளார்.

இப்படத்தின் உருவாக்கத்தில் ஷகிலா பணியாற்றுகின்றார். தன்னை பற்றியும், தன் வீட்டை சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நடிகை ரிச்சாவும் ஷகிலாவுடன் நெருங்கி பழகி அவரது உடல்மொழிகளை கற்று வருகிறார்.

மேலும், ஷகிலாவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

seithichurul

Trending

Exit mobile version