சினிமா செய்திகள்

பாலிவுட்டில் களம் குதித்த ஷாருக்கான் மகன்: திரையுலகினர் வாழ்த்து!

Published

on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் பாலிவுட்டில் குதித்துள்ளதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தன.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி அதன் பின் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆரியன்கான் தற்போது அந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு பாலிவுட்டில் களம் புகுந்துள்ளார் .

பாலிவுட்டில் அவர் ஒரு வெப்தொடரை இயக்க இருப்பதாகவும் அவர் இயக்கயிருக்கும் தொடரின் மாதிரி படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்தத் தொடரை அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க இருப்பதாகவும் முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்திலும் இளம் நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொடரின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் ஆர்யன்கானின் கனவுத்தொடர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷாருக் கானின் மகள் சுஹானாகான் வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் தற்போது ஆர்யன்கானும் திரையுலகில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version