சினிமா செய்திகள்

விஜய் 63-ல் ஷாருக் கான் நடிப்பதை மீண்டும் உறுதி செய்த அட்லி?

Published

on

தளபதி 63 படத்தில் ஷாருக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் சில நாட்களுக்கு முன்னர் வைரலாக பரவியது.

தற்போது அதை மீண்டும் உறுதி செய்யும் படியான சம்பவம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய போட்டியில், ஷாருக்கானுக்கு அருகில் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா வந்து அமர்ந்தனர்.

ஆட்டம் முடியும் வரை ஷாருக்கானும் அட்லியும் வெகுநேரம் பேசிக் கொண்டே மேட்சை பார்த்த தளபதி ரசிகர்கள் ஷாருக்கான் நிச்சயம் தளபதி 63-ல் நடிக்கிறார் என்ற செய்தியை உறுதியாக நம்பி வருகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அர்ச்சனா கல்பாத்தி எந்த ட்வீட்டும் போடாதது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version