சினிமா செய்திகள்

அட்லிக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான் மனைவி.. என்ன காரணம்?

Published

on

அட்லி இப்போது ஷருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ஜவான் திரைப்படம் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதே நேரம் அட்லி எப்போதும் தான் எடுக்கும் படங்களுக்குச் சொல்லும் பட்ஜெட்டை விட கூடுதலாகப் பல கோடி ரூபாய் செலவு வைப்பார்.

விஜய் வைத்து இவர் இயக்கிய மெர்சல், பிகில் திரைப்படங்களின் போதும் இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திற்கும் அதிக செலவுகளை அட்லி வைத்து வருவதால், ரெட் சில்லிஸ் சார்பில் படத்தை தயாரித்து வரும் ஷாருக்கானின் மனைவி அட்லியை அழைத்து பல்வேறு கண்டிஷன்களை போட்டுள்ளார்.

atlee

அப்போது ஷாருக்கான் சமீப காலமாக நடித்து ரிலீஸ் ஆன படங்கள் எதிர்பார்த்து அளவு வெற்றிபெறவில்லை. எங்களிடம் பட்ஜெட் குறைவாகவே உள்ளது. எனவே தேவையில்லா செலவுகளைக் கொண்டு வர வேண்டாம் எனவும், கொடுக்கும் பணத்தில் கச்சிதமாகச் சொன்ன படி காட்சிகளை எடுக்குமாறு கூறியுள்ளார்.

Trending

Exit mobile version