விமர்சனம்

பதான் விமர்சனம்: சல்மான் கானோட அந்த கேமியோ என்ட்ரி.. ஷாருக்கான் 4 வருஷம் கழிச்சு செம மிரட்டல்!

Published

on

ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் கடைசியாக பாலிவுட்டில் 400 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்நிலையில், அந்த இயக்குநருடன் கைகோர்த்த ஷாருக்கான் 4 வருஷம் கழித்து பாலிவுட்டில் மீண்டும் ஹீரோவாக களமிறங்கி தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

வார் திரைப்படம் போலவே இந்த படமும் ஹாலிவுட் படங்களின் காப்பி போலவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை என்டர்டெயின் செய்து சும்மா தெறிக்கவிடுகிறது.

#image_title

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் பாணி படமாகவே ஷாருக்கான், தீபிகா படுகோன் கடைசியாக நடித்த ஹேப்பி நியூ இயர் படம் இருக்கும். அந்த படத்தில் நடனத்தை இணைத்து கமர்ஷியல் படமாக மாற்றி இருப்பார்கள். இந்த படமும் ஜேம்ஸ் பாண்ட், டாம் க்ரூஸ் வகையறா மற்றும் கேப்டன் விஜயகாந்தின் தேசப்பற்று ஃபார்மூலா படமாகவே உருவாகி உள்ளது.

முன்னாள் ஸ்பை ஏஜென்ட்டான ஜான் ஆபிரகாம் இந்தியாவுக்கு எதிராக திரும்புவதும் இந்தியாவையே அழிக்கும் பெரிய மிஷனில் அவர் களமிறங்குவதை அறிந்து கொள்ளும் டிம்பிள் கம்பாடியா பதானை ஜான் ஆபிரகாமை அழிக்கும் மிஷனில் களமிறக்குவது தான் இந்த பதான் படத்தின் கதை.

#image_title

படம் ஆரம்பிக்கும் போது ஷாருக்கானை எப்படி அதிரடியாக காட்டுகின்றனரோ கடைசி வரை படம் பட்டாசாக வெடிக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி உள்ள இந்த படம் இந்தியா பாகிஸ்தான் உறவையும் அதற்கு இடையே தீவிரவாதிகள் செய்யும் சதியையும் எடுத்து உரைத்து உணர்ச்சி பொங்க வைத்து விடுகிறது.

தீபிகா படுகோனே வித விதமான கவர்ச்சி பிகினி உடைகளை அணிந்து கொண்டு கண்களுக்கு விருந்து கொடுப்பது மட்டுமின்றி டாம்ப் ரைடர் படத்தில் வரும் ஏஞ்சலினா ஜோலி போல சும்மா பறந்து பறந்து சண்டை போட்டு ஸ்க்ரீன் ஸ்பேஸை தன் வசப்படுத்துகிறார்.

#image_title

வார் படத்தில் வருவது போன்ற ட்விஸ்ட் காட்சிகளுடன் இரண்டாம் பாதியை மேலும், ஸ்பீடப் செய்து ரசிகர்களை எதையுமே யோசிக்க விடாமல் ஹெலிகாப்டர் ஷூட்டிங், பைக் ஸ்டன்ட், கார் சேஸிங், கவர்ச்சி, நேருக்கு நேர் சண்டைப் போட்டு கொள்வது, ஸ்கை ஜெட் ஷூட்டில் ஷாருக்கான் ஜான் ஆபிரகாம் போடும் கிளைமேக்ஸ் சண்டை என டோட்டலாக செம ட்ரீட் கொடுக்கிறது இந்த பதான்.

சில இடங்களில் பீஸ்ட் படம் எஃபெக்ட் மற்றும் நம்ப முடியாத சண்டைக் காட்சிகள் டயர்ட் ஆக்கினாலும், ஷாருக்கான் ரசிகர்களுக்கு அது வேறலெவல் என்டர்டெயின்மென்ட் என்பது கன்ஃபார்ம்.

இந்தியாவின் ஸ்பை யூனிவர்ஸ் படமாக மாறி உள்ள இந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் டைகர் பட சல்மான் கான் வந்து ஷாருக்கானுக்கு உதவும் சண்டைக் காட்சி ஒன்றே போதும் ரசிகர்கள் 200 ரூபாய் அல்லது 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து இருந்தாலும் வொர்த் தான் பாஸ்!

பதான் ரேட்டிங்: 3.75/5.

seithichurul

Trending

Exit mobile version