Connect with us

விமர்சனம்

Shadow and Bone Web Series – விமர்சனம்

Published

on

இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய கருப்பு வேலி இருக்கிறது. அது அந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரிய தடையாக இருக்கிறது. அதைத் தாண்டி அடுத்த பக்க நாட்டிற்கு சென்றால் தான் வளமாக வாழ முடியும். அதற்காக ஒரு பக்கம் இருக்கும் நாட்டின் வீரர்கள் ஒவ்வொரு முறையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இருளுக்குள் இருக்கும் அந்த டிராகன்கள் அவர்களை அந்த இருளை மீறி செல்ல முடியாமல் தடுத்து கொன்று விடுகின்றன.

இதை மீறி செல்ல வேண்டும் என்றால் சிறப்பு சக்தி உடையவர்களால் தான் முடியும். அதுவும் சூரிய சக்தி உடைய பெண்ணால் தான் முடியும். பல நூறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அப்படி ஒரு சக்தியோடு ஒரு பெண் வளர்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அதை தெரிந்துகொள்ளும் அந்த நாட்டு மக்கள் அவரை தங்களை மீட்க வந்த தேவதை என கொண்டாடுகிறார்கள். ஒரு பக்கத்தினர் அவரை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். கொண்டாடப்படவும், கொலை செய்யப்படவும் அந்தப் பெண் தேடப்படுவது ஏன் என்பதை சில பல சுவாரஸ்ய காட்சிகளுடன் சொல்லியிருக்கும் சீரியல் தான் Shadows and Bone.

இந்த சீரியல் Liegh Bardugo-வின் Grisha என்ற நாவல் மற்றும் Six of Crows என்ற நாவல்களை இணைத்து திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. நல்ல பேன்டஸி கதை. அதற்கான நடிகர்கள் தேர்வு என அட்டகாசம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு சஸ்பென்ஸ் உடைக்கப்படும். அப்படி உடைக்கப்படும் சஸ்பென்ஸ் மற்றும் அதற்கான விதம் மிகவும் அட்டகாசமாக சுவாரஸ்யமாக இருக்கும். இதன் பலமே அதுதான். இதிலும் சின்ன சின்ன காதல், அதில் ஏமாற்றம் என சென்டிமென்டுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

நல்ல கதைதான் நிறைய டவிஸ்டுகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு எபிசோடிலும் ஓவர் பில்டப் கொடுக்கிறார்கள். அதற்கு இசையும் உதவுகிறது. வடிவேலு காமெடியில் சொல்வது போல பில்டப் கொடுக்கிறானே தவிர ஆக்சன்ல ஏதும் இல்லை என்பது இந்த தொடருக்கு அப்படியே பொருந்தும். கொடுக்கப்பட்ட பில்டப் அளவுக்கு காட்ஸிகளும் வேகமாக இருந்திருந்தால் இந்த தொடர் இன்னுமே ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும். ஆனாலும் இப்போதும் குறையில்லை. ஒரு நல்ல பேன்டஸி பிரீயட் தொடர் பார்க்க விரும்புவர்கள் இதைப் பார்க்கலாம். அடுத்தடுத்த சிசன்களின் இன்னும் கூட சுவாரஸ்யம் இருக்கலாம். எட்டு எபிஸோடுகளாக நெட்பிலிக்சில் காண கிடைக்கிறது. பார்த்து வையுங்கள் கிரிசா மற்றும் பிளாக் வில்லனின் போட்டிகள் அடுத்தடுத்து நம்மை வியக்க வைக்கலாம்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!