தமிழ்நாடு

கணவனை இழந்த இளம்பெண்ணிடம் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசி தவறான உறவுக்கு அழைத்த அதிகாரி!

Published

on

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கணவனை இழந்த இளம்பெண் ஒருவரிடம் அப்பகுதி வருவாய் ஆய்வாளர் இரவு நேரங்களில் போன் செய்து ஆபாசமாக பேசி தவறான உறவுக்கு அழைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவனை இழந்து வறுமையில் கஷ்டப்பட்டு வருகிறார். இதனையடுத்து தனக்கு விதவை சான்றிதழ் கேட்டு அந்த பகுதி வருவாய் ஆய்வாளர் ஜெயகுமாரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் அந்த பெண்ணின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

குறிப்பாக இரவு நேரங்களில் போன் செய்து அந்த இளம் விதவையிடம் ஆபாசமாக பேசிவந்துள்ளார். மேலும் உனக்கு விதவை சான்றிதழ் எல்லாம் வேண்டாம், என்னுடன் வந்திடு நான் உன்னை ராணி மாதிரி பாத்துக்குறேன் என எல்லை மீறி பேசியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது உறவினர்களிடம் கதறி அழுது நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் கோபத்துடன் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரி ஜெயக்குமாரோ மிரட்டும் தொனியில் அவர்களிடம் பேச அவர்கள் கோபத்தில் ஜெயக்குமாரை தரதரவென வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்தனர். இதனையடுத்து இதில் உடனடியாக தலையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு அந்த பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version