இந்தியா

ஒரே மாதத்தில் 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவு: கேரளாவில் பயங்கரம்!

Published

on

இந்தியாவில் கல்வியில் முன்னிலையில் உள்ள கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் அங்கு 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இந்த தகவல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரங்களின்படி, கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இந்த வருடம் கடுமையாக உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன.

அதன்படி இந்த சட்டம் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 2013-ஆம் ஆண்டு 1016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2015-ஆம் ஆண்டு 1589 வழக்குகளாக அதிகரித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டில் 3478 என குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் கேரளா முழுவதும் 589 குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version