தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் வீடு: புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த விருதுநகர் சிறுமி!

Published

on

கன மழை பெய்து வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரிடும்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வெள்ளம் ஏற்படும் போது நமது வீடு திடீரென மிதக்கும் வடிவில் புதிய தொழில்நுட்பத்தை 7 வயது சிறுமி கண்டுபிடித்துள்ளதை அடுத்து அந்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

விருதுநகரை சேர்ந்த நரேஷ் குமார் – சித்ரா தம்பதியினரின் மகள் 7 வயது மகள் விசாலினி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் கூடிய வீடு எப்படி அமைப்பது என்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளார்

இந்த கண்டுபிடிப்பின் மூலம் வெள்ளம் திடீரென ஏற்பட்டால் வீட்டிற்குள் தண்ணீர் புகாமல் வெள்ளத்தில் மிதக்கும் வகையில் வீட்டை வடிவமைக்கலாம். இவரது கண்டுபிடிப்பை பாராட்டிய மத்திய அரசு பிரதான் மந்திரி ராஜ்ய புரஸ்கார் என்ற விருதை அறிவித்துள்ளது

மேலும் இந்த சிறுமியை காணொளி மூலம் பாராட்டிய பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கினர் என்பதும் விசாலினியின் பெற்றோர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெள்ளத்தில் மிதக்கும் வீடு எப்படி கட்டுவது என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த விஷாலினிக்கு அவருடைய ஆசிரியர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version