தமிழ்நாடு

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்!

Published

on

அதிமுக வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ ஒருவர் போட்டியிட்டதை அடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ சந்திரசேகரன் அவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சேந்தமங்கலம் தொகுதிக்கு சந்திரன் என்பவரை அதிமுக வேட்பாளராக அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ சந்திரசேகரன் தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரிடம் அதிமுக நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் அதிமுக தலைமை சந்திரசேகரனை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் நான் அதற்கெல்லாம் பயப்பட போவதில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் எனக்கு கவலையும் இல்லை. அதிமுக வேட்பாளருக்கு எதிராக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார்.

Trending

Exit mobile version