தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கென தனி ரயில்வே துறையா? மத்திய அரசை கதற வைக்கும் முதல்வர்!

Published

on

ரயில்வே துறை என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு என தனி இரயில்வே துறை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது மத்திய அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையம் மற்றும் புதிய ரயில்கள் அமைக்க வேண்டும் என்றால் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு என்ன ஒரு புதிய ரயில்வே துறையை உருவாக்கி அதன்மூலம் புதிய ரயில் நிலையங்கள், புதிய ரயில் பாதைகள் ஆகியவற்றை தொடங்கலாம் என்ற ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிதி நிலைமையில் தமிழ்நாடு தனியாக ரயில்வே துறையை இயக்க முடியாது என்பதால் இதில் தனியார் துறையை ஈடுபடுத்தவும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறைக்கு என தனி அமைச்சகம் அமைத்து அதன் மூலம் தமிழகத்திற்கு தேவையான ரயில்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டம் வந்தால் இந்தியாவிற்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் புரட்சிகரமாக இருக்கும் கூறப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் இந்த முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும் இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததே மத்திய அரசை கதறவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version