தொழில்நுட்பம்

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ துவக்க விற்பனை மற்றும் சலுகைகள்.!

Published

on

சியோமி நிறுவனம் முதல் முறையாகத் தனது புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது.

நேற்று நடைபெற்ற சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுக விழாவில், ரெட்மி நோட் 6 ப்ரோ வின் விலை மற்றும் வேரியண்ட் விபரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி துவக்க வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.13,999 என்ற விலையிலும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.15,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துவக்க விற்பனையான இன்று பல அதிரடி சலுகைகளை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. பிளாக் ஃப்ரைடே விற்பனையை முன்னிட்டு அனைத்து சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.1000 சலுகையை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ துவக்க வேரியண்ட் வெறும் ரூ.12,999க்கும் மற்றொரு வேரியண்ட் ரூ.14,999க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையாக ரூ.500 உடனடி சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,400 கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version