தமிழ்நாடு

‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்: தங்கமணி வீட்டின் ரெய்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published

on

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மாண்புமிகு தளபதி அவர்களின் அரசு நிறைவேற்றி வருகிறது. கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை.

கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்.

Trending

Exit mobile version