தமிழ்நாடு

சசிகலா காலில் குழந்தை போல தவழ்ந்தது யாரு? சட்டசபையில் சர்ச்சைக்கு வித்திட்ட செந்தில் பாலாஜி!

Published

on

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆவதற்கு முன்னர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை மறைமுகமாக தமிழக சட்டசபையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டசபையில் மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது சர்ச்சை வெடித்தது.

செந்தில் பாலாஜி பேசியபோது, நான் யாரிடமும் கும்பிட்டோ, குழந்தை போல தவழ்ந்தோ பதவி பெறவில்லை. எங்கள் தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் எதிர்காலம் என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து தனது உரையை ஆரம்பித்தபோதே அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்ததை இதற்கு முன்னர் திமுக பலமுறை விமர்சித்துள்ளது. சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்றவர், தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் என திமுக மட்டுமல்லாமல் அமமுக தினகரனும் விமர்சித்து தான் வருகிறார். ஆனால் இதுவரை யாரும் இதனை சட்டமன்றத்தில் கூறி விமர்சித்ததில்லை. இதானை தற்போது திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்துவிட்டார். இது சட்டசபையில் சர்ச்சைக்கு வித்திட்டது.

seithichurul

Trending

Exit mobile version